Wednesday, April 16, 2025

சர்க்கரை நோய்க்கு மருந்து





அகத்தியப்பெருமான் ஜீவநாடியில் வந்து, மனிதனை வாட்டும் நோய்களிலிருந்து விடுதலை பெற, பலவித மூலிகை மருந்துகளை உரைத்துள்ளார். அப்படி சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து கேட்ட பொழுது "அது ஒரு நோயே அல்ல!" என்றார். எனினும் தொடர்ந்து விடாமல் கேட்ட பொழுது, தினமும் திரிபலா, திரிகடுகம் எடுப்பது நல்லது என்று சூக்ஷுமமாக உரைத்தார். அடியேனின் நண்பர் ஒருவர், மருத்துவர். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அகத்தியப் பெருமான் மீது மிகுந்த பற்றுள்ளவர். அவரின் வாக்கை முழுமையாக நம்பி சரணடைந்து அதுபோல் செயலாற்றுபவர். அவர் ஏற்கனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க காலையிலும், இரவிலும் "மெட்ஃபார்மின் 500 mg" மாத்திரையை எடுத்து வந்தார்.

அகத்தியர் கூற்றின்படி, காலை உணவுக்கு முன் "திரிகடுகம்" 1 சிட்டிகையும், மத்திய உணவுக்கு முன் "திரிபலா" ஒரு சிட்டிகையும் சாப்பிட தொடங்கினார். சில நாட்களில் அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடும் முன்னும், உணவு உண்ட பின்னும் நிறய அளவுக்கு குறைந்து போனது. இந்த சூழ்நிலையில் 500gm மருந்தை 250gm ஆக குறைத்துப் பார்த்தார். அப்பொழுதும் அவரின் சர்க்கரை அளவு 100க்கும் கீழே மிக குறைந்து இருந்தது. அகத்தியப்பெருமான் உரைத்த மருந்தும், குருவாக்கின் மீதுள்ள நம்பிக்கையும்தான் இதற்கு காரணம் என்கிறார். ஆனால், இதனுடன் சாப்பாட்டிலும் கட்டுப்பாடு இருந்ததால், இது சாத்தியமாயிற்று, உடலும் வலிமை பெற்றது என்கிறார்.

No comments:

Post a Comment

அகத்தியப்பெருமானின் விளக்கம்!

கேள்வி: சமீபகாலத்தில், வாமாசாரத்தின் பூஜைகள், சக்தி, ஏவல் போன்றவை நிறையவே தலை தூக்கி வருவதாக தெரிகிறது. அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு எடு...